திரு.தந்தை பெரியார் அவர்கள் பிறந்ததினம்!.
Mr Periyars birthday
திராவிட இயக்கத்தின் பேராசான் - ஈரோட்டு சிங்கம் - பகுத்தறிவு பகலவன் திரு.தந்தை பெரியார் அவர்கள் பிறந்ததினம்!.
உனக்கு பெருமை வேண்டுமானாலும்,உற்சாகம் வேண்டுமானாலும்,பிற மனிதனுக்கு தொண்டு செய்வதில்
போட்டி போடுவதன் மூலம் தேடிக்கொள்!. - தந்தை பெரியார்
தந்தை பெரியார் என அனைவராலும் அழைக்கப்படும் ஈ.வெ.ராமசாமி அவர்கள், 1879ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார்.
இவர் காந்தியடிகளின் கொள்கைகளை பின்பற்றியது மட்டுமல்லாமல் பிறருக்கும் எடுத்துக்கூறினார். வெளிநாட்டு துணிகளை விற்பனை செய்யும் வணிகர்களுக்கு எதிராக மறியல் போராட்டங்களையும் நடத்தினார்.

இவருடைய சமுதாய பங்களிப்பைப் பாராட்டி யுனெஸ்கோ நிறுவனம் பெரியாருக்கு புத்துலக தொலைநோக்காளர், தென்னிந்தியாவின் சாக்ரட்டிஸ், சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை என பாராட்டி விருது வழங்கியது.
அறியாமை, மூடநம்பிக்கை மற்றும் அர்த்தமற்ற சம்பிரதாயங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி, பகுத்தறிவு பகலவன், வைக்கம் வீரர் மற்றும் தந்தை பெரியார் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறார்.
பகுத்தறிவின் சிற்பி, அறிவு பூட்டின் திறவுகோல், உலகின் மாபெரும் சுயசிந்தனையாளரும், அழியாத வரலாற்றின் அறிஞருமான தந்தை பெரியார் 1973ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி 94வது வயதில் மறைந்தார்.