திரு.அயோத்திதாச பண்டிதர் அவர்கள் பிறந்ததினம்! - Seithipunal
Seithipunal


திரு.அயோத்திதாச பண்டிதர் அவர்கள் பிறந்ததினம்!

தென்னிந்திய சமூக சீர்திருத்த தந்தை' அண்ணல் அம்பேத்கர் , தந்தை பெரியார் அவர்களின் முன்னோடி திரு.அயோத்திதாச பண்டிதர் அவர்கள் பிறந்ததினம்!.

அயோத்தி தாசர் (C. Iyothee Thass, மே 20, 1845 –மே 5, 1914) தென்னிந்தியாவின் முதல் சாதி எதிர்ப்புப் போராளி, சமூக சேவகர், தமிழறிஞர் மற்றும் சித்த மருத்துவர் ஆவார். திராவிட இயக்கம் உருவாக வித்திட்ட முன்னோடிகளில் முதன்மையானவர். ஆதி திராவிட பின்புலத்தில் இருந்து வந்தவர். இவர்  தங்கள் குடும்ப மருத்துவர் என திரு.வி.க தன் நாட்குறிப்புகளில் குறிப்பிட்டுள்ளார். 

தலித் மக்களைக் குறிக்க, ‘ஆதிதிராவிடர்’ எனும் சொல்லை அவர் முதன்முதலில் பயன்படுத்தினார். 1898-ல் சென்னை, ராயப்பேட்டையில் ‘தென்னிந்திய சாக்கிய பெளத்த சங்கம்’ எனும் அமைப்பை நிறுவினார். 
1891-இல் இரட்டைமலை சீனிவாசனுடன் இணைந்து பஞ்சமர் மகாசன சபையைத் தோற்றுவித்தார். 

இவர் 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆதிதிராவிட மக்களின் முன்னேற்றத்துக்காக அரசியல், சமயம், இலக்கியம் ஆகிய களங்களில் தீவிரமாகச் செயல்பட்டார். இவர் திராவிட கருத்தியலின் முன்னோடி என அறியப்பட்டார். திராவிட மகாசன சபையை நிறுவி திராவிட அரசியலைத் தொடங்கி வைத்ததால் திராவிட அரசியலின் முன்னோடி எனவும் கூறப்படுகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mr. Ayodhya Das Pandit was born on this day


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->