அரசு நிகழ்ச்சியில் எம்.பி - எம்.எல்.ஏவுக்கு இடையே மோதல் - தேனியில் பரபரப்பு.!
mp and mla fight in government function at theni
இன்று தமிழகம் முழுவதும் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த நிலையில், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே, ஒரு தனியார் மண்டபத்தில் இந்த விழா நடைபெற்றது.
இந்த நிலையில், இந்த விழாவை முன்னிட்டு வைக்கப்பட்ட வரவேற்பு பேனரில் ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் படம் மட்டும் இருந்தது. இதனால் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கத் தமிழ்ச்செல்வன் கோபத்துடன் விழா மேடைக்கு வந்து தேனி எம்.பியின் படம் ஏன் வரவேற்பு பேனரில் இடம் பெறவில்லை என்று மாவட்ட ஆட்சியரிடம் கேள்வி எழுப்பினார். மேலும் திமுக எம்.எல்.ஏ மகாராஜனை ‘முட்டா பய’ என்று கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மகாராஜன், ” யாரைப் பார்த்து முட்டாப் பய-ன்னு சொல்ற.. ராஸ்கல்,, யாருடா நீ” என்று எம்.பி தங்க தமிழ்ச்செல்வனை ஒருமையில் திட்டியதுடன், நலத்திட்ட உதவிகளை தானே வழங்குவேன் என்றும் கூறியுள்ளார். இதனால், மோதல் அதிகரித்தது. இந்த மோதலால் அரசு விழாவும் பாதியிலேயே முடிக்கப்பட்டது.
English Summary
mp and mla fight in government function at theni