10 வயது மகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாயும் தற்கொலை.. காவல்துறையினர் விசாரணை..! - Seithipunal
Seithipunal


தாய் மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, அம்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் லதா. இவருக்கு தவஞ்ச் என்ற மகள் இருக்கிறார் இந்நிலையில் 6:00 மணி அளவில் மகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு தானும் விஷம் அருந்தியுள்ளார். தாயின் செய்கையில் சந்தேகம் அடைந்த அவரது மகன் உடனடியாக இதுகுறித்து உறவினர்களுக்கு தகவல் அளித்துள்ளார் .

மேலும், அக்கம்பக்கதினரிடம் உதவி கேட்டுள்ளார்.  சிறுவனின் குரல் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் லதா உயிரிழந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் ,உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரது மகனை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லதாவின் செல்போனை காவல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mother And Son Suicide In Chennai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?
Seithipunal
--> -->