தீபாவளியையொட்டி லஞ்சம் ஒழிப்பு துறை சோதனை: செட்டிகுளம் சார்பதிவாளர் அலுவலகத்தில் சிக்கிய பணம்..?
Money seized from the Chettikulam Sub Registrars office during a raid by the Anti Corruption Department on the occasion of Diwali
தீபாவளியையொட்டி தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் லஞ்சம் ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதில் அரியலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள சார் பதிவாளர்கள் அலுவலகங்களில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. இன்று பெரம்பலூரில் லஞ்சம் ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர்.
அதன்படி, பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளத்தில் சார் பதிவாளர் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் சார் பதிவாளர் அலுவலகத்தில் சோதனை நடத்தினர். இதில் லஞ்சம் ஒழிப்புத்துறை டிஎஸ்பி ஹேமசித்ரா, இன்ஸ்பெக்டர் சரவணன் உள்பட 06 பேர் கொண்ட போலீஸார் மாலை 03.45 மணிக்கு சார் பதிவாளர் அலுவலகத்திற்குள் நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர்.
சுமார் 05 மணி நேரம் நடந்த இந்த சோதனை இரவு 09.00 மணிக்கு நிறைவடைந்தது. இந்த சோதனையின் போது கணக்கில் வராத ரூ.33 ஆயிரம் ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. எனினும் வேறு எதுவும் சிக்கவில்லை என லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் தெரிவித்துள்ளதோடு, அடுத்த கட்ட விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Money seized from the Chettikulam Sub Registrars office during a raid by the Anti Corruption Department on the occasion of Diwali