பண்ருட்டியில் பரபரப்பு || பிளஸ் 2 மாணவிகளிடம் உதவித்தொகை தருவதாக கூறி பணமோசடி.!! - Seithipunal
Seithipunal


பண்ருட்டியில் பரபரப்பட்டு || பிளஸ் 2 மாணவிகளிடம் உதவித்தொகை தருவதாக கூறி பணமோசடி.!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி அருகே மாளிகைமேடு கிராமத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்த மாணவி ஒருவருக்கு அரசு பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்துள்ள மாணவிகளுக்கு அரசு சார்பில் ரூ.13 ஆயிரம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

இந்தத் உதவித்தொகையை பெறுவதற்கு உங்கள் கணக்கில் குறைந்த பட்ச இருப்பு தொகை ரூ.3,500 இருக்க வேண்டும் என்று மர்ம நபர் ஒருவர் செல்போனில் தகவல் தெரிவித்துள்ளார். இந்தத் தகவலை மனைவி தன் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதனை உண்மை என்று நம்பிய மாணவியின் தந்தை, 'கூகுள் பே' மூலம் மர்ம நபரின் வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி வைத்தார். இதேபோன்று அந்த மாணவியின் தோழிகள் மூன்று பேரும் மர்மநபரின் செல்போன் எண்ணுக்கு தலா ரூ.3 ஆயிரத்து 500-ஐ கூகுள் பே மூலம் அனுப்பி வைத்தனர். 

ஆனால் அந்த மர்ம நபர் கூறிய படி மாணவிகளின் வங்கி கணக்குகளில் பணம் வந்து சேரவில்லை. இதையடுத்து மாணவிகள், மர்ம நபரின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது போன் அணைத்து அணைத்து வைக்கப் பட்டிருந்தது.

 இதன் பிறகே தாங்கள் ஏமாந்ததை அறிந்து மாணவிகள் சம்பவம் குறித்து காவல் நிலையத்திலும், கடலூர் சைபர் கிரைம் போலீசாரிடமும் புகார் அளித்தனர். அந்த புகாரின் படி கடலூர் சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பன்னிரெண்டாம் வகுப்பு மாணவிகளிடம் உதவித்தொகை தருவதாக கூறி பண மோசடி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

money fraud to four plus to student in pandrutti


கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?



Advertisement

கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?




Seithipunal
--> -->