சென்னை நவீன மாட்டு கொட்டகை - மாநகராட்சி அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


இன்று சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 96 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், சென்னையில் கால்நடை மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளுக்கு வரும் கால்நடைகள், செல்லப்பிராணிகளுக்கு மைக்ரோ சிப் பொருத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், சென்னை மாநகராட்சி பகுதிகளில் மாடுகள் சுற்றித்திரிவதை கட்டுப்படுத்துவதற்காக நவீன மாட்டுக்கொட்டகை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் படி முதற்கட்டமாக மண்டலம் 5 பேசின் பாலம் சாலையில் 100 மாடுகள் தங்க வைக்கும் அளவிற்கு 7,700 சதுர அடி பரப்பளவில் நவீன மாட்டு கொட்டகை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த மாட்டு கொட்டகை அமைப்பதில் சென்னை மாநகராட்சி, மாட்டின் உரிமையாளர்கள் மற்றும் கால்நடை வளர்ப்போர் சங்கங்களின் பங்களிப்புகளும் பொறுப்புகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. நவீன மாட்டுக்கொட்டகையில் மாடுகளை கட்டிப்போடுவதற்கு நாள் ஒன்றுக்கு 10 ரூபாய் வசூலிக்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

modern cow shed in chennai chennai corporation decision


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->