ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலின் மாதிரி வாக்குப்பதிவு இன்று தொடக்கம்...!! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக வேட்பாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ் தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் மேகனா உட்பட 75 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பயன்படுத்தக்கூடிய வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் பொறித்த பட்டியல் ஒட்டும் பணி நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்களின் சோதனையானது அனைத்து கட்சி பிரதிநிதிகள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. ஈரோடு கிடக்கு தொகுதிக்குட்பட்ட 238 வாக்கு சாவடிகளில் பயன்படுத்தியுள்ள 280 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாரான நிலையில் உள்ளன. 

இந்த வாக்குப்பதிவு இயந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவானது இன்று வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. 

இதனைத் தொடர்ந்து அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களும் சீலிடப்பட்டு சம்பந்தப்பட்ட வாக்கு சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என தேர்தல் நடைபெற்ற அதிகாரி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mock Voting for Erode East ByElection Begins Today


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->