வில்லியனூர் தொகுதி மக்களுக்கு இலவச காலணி,போர்வை..MLA சிவா வழங்கினார்!
MLA Siva provided free footwear and blankets to the people of Villiyanur constituency
வில்லியனூர் தொகுதியை சேர்ந்த பயனாளிகளுக்கு இலவச காலணி மற்றும் போர்வைகளை சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் இரா. சிவா வழங்கினார்.
புதுச்சேரி மாநிலம் முழுவதும் ஆண்டுதோறும் புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் 60 வயத்திற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச காலணி, போர்வை வழங்கப்பட்டு வருகிறது,அந்தவகையில் புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் இந்த ஆண்டு முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச காலணி, போர்வை தொகுதி வாரியாக வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் வில்லியனூர் தொகுதிக்குட்பட்ட 60 வயத்திற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச காலணி, போர்வை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பெரியபேட், கொம்பாக்கம், வி.மணவெளி, ஜி.என். பாளையம் உள்ளிட்ட அங்கன்வாடி மையத்தில் நடந்த நிகழ்ச்சியில், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான இரா. சிவா அவர்கள் தலைமை தாங்கி, பயனாளிகளுக்கு இலவச காலணி மற்றும் போர்வை வழங்கினார்.

இதில் துறை அதிகாரிகள், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, தர்மராஜ், தொகுதி துணை செயலாளர் ஜெகன்மோகன், பொருளாளர் கந்தசாமி, தொகுதி செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், கிளை கழக நிர்வாகிகள் சுரேஷ், அன்பழகன், பரதன், கலியபெருமாள், வேலு படையாட்சி, பாலகுரு, மோகன், சுப்ரமணி, ஜெயபால், கந்தசாமி, ஜீவா, வாசு, ஜெகதீசன், முருகையன், குமார், பாலதண்டாயுதம், உலகநாதன், கண்ணன், சந்திரசேகர், ஜெயராஜ், மணிகண்டன், பத்மநாபன், ரகு, சந்தோஷ், சூர்யா, கோபி, வேல்முருகன், பூபாலன், தாண்டாவராயன், செல்வேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
English Summary
MLA Siva provided free footwear and blankets to the people of Villiyanur constituency