திமுகவின் கூடாரத்தையே அமைச்சர் செந்தில் பாலாஜி காலி செய்து விடுவார் - எம்ஏல்ஏ.,வின் பரபரப்பு பேச்சு! - Seithipunal
Seithipunal


திமுக கூடாரத்தையே அமைச்சர் செந்தில் பாலாஜி மொத்தமாக காலி செய்து விடுவார் என்று, அதிமுக எம்எல்ஏ செந்தில்நாதன் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் அதிமுக உறுப்பினர் சேர்க்கை பணிகள் குறித்து, சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர்  (அதிமுக ) செந்தில்நாதன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பேசிய செந்தில் நாதன், "அம்மாவுக்கு செய்த துரோகத்தால் செந்தில் பாலாஜி தற்போது அனுபவித்து {வருமான வரி சோதனையை குறிப்பிட்டு} வருகிறார்.

இன்னும் ஒரு சில ஆண்டுகளில் செந்தில் பாலாஜி திமுக கூட்டக் கூடாரத்தையே காலி செய்து விடுவார்.

அதிமுக மாவட்ட சேர்மன் பொன்மணி பாஸ்கரனின் 40 ஆண்டு கால தொழிலை ( டாஸ்மார்க் சரக்கு வாகன ஒப்பந்தத்தை எடுத்திருந்த ஒப்பந்ததாரர் ஆவார்) பாழக்கியதன் விளைவுதான், அவருடைய சாபம் தான், அவருடைய வேண்டுதல்தான் கடவுள், செந்தில் பாலாஜியை தற்போது பழி வாங்கிக் கொண்டிருக்கிது" என்ற செந்தில்நாதன் பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

MLA Senthilnadhan sppech about Senthilbalaji ADMK Dmk


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->