ஆபத்தான மின் கம்பங்களை புதிதாக மாற்றி கொடுத்த MLA அனிபால் கென்னடி! - Seithipunal
Seithipunal


உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட வாணரப்பேட்டை, பாரதிதாசன் வீதி பகுதியில் மின் கம்பங்கள் உடைந்து ஆபத்தான நிலையில் இருப்பதாக வந்த புகாரை அடுத்து கம்பங்களை புதிதாக மாற்றி கொடுத்த சட்ட மன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி மக்களின் நன்மதிப்பை பெற்றார்.

புதுச்சேரி, இந்த மே மாதம் 9 ஆம் தேதி வாணரப்பேட்டை, பாரதிதாசன் வீதியில் உள்ள பழுதடைந்த மின் கம்பம் மாற்றப்படவேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையை தொடர்ந்து, உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி மின் துறை அதிகாரியை சந்தித்து உடனடி நடவடிக்கை எடுத்தார்.
பொதுமக்களை நேரில் மின்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்ற அவர், உதவி பொறியாளர் முத்தானந்தம் உள்ளிட்ட higher officials-ஐ சந்தித்து, பழுதடைந்த கம்பத்தை மாற்றி அமைக்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டியது குறித்து வலியுறுத்தினார். கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார்.

 உதவி பொறியாளர் முத்தானந்தம் அவர்கள்.தொடர்ந்து, மின்துறை இளநிலை பொறியாளர் சுரேஷ், லைன்மேன் மற்றும் தொழிலாளர்கள் இணைந்து, JCB உதவியுடன் 7 மணி நேரம் பணி செய்து புதிய கம்பம் அமைக்கப்பட்டது. முழு பணிக்குமேல் கண்காணிப்பு செய்த சட்டமன்ற உறுப்பினர், பொதுமக்களிடம் முழுமையான ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

இந்த செயல்பாட்டில், தொகுதி செயலாளர் சக்திவேல், கிளை செயலாளர் ராகேஷ், பிரபு மற்றும் பொதுமக்கள் நாராயணன், ராமச்சந்திரன், ஸ்ரீனிவாசன், ஜெயராமன், ஆரோக்கியதாஸ், கலியபெருமாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பொது மக்கள் சார்பாகவும், பஞ்சாயத்தார் சார்பாகவும் சட்ட மன்ற உறுப்பினருக்கு நன்றிகள் பாராட்டுகள் குவிந்தாது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

MLA Anibal Kennedy replaced the dangerous electric poles


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->