#BREAKING || போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஸ்ட்ரைக் அறிவிப்பு.. முதலமைச்சர் அவசர ஆலோசனை.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த அறிவிப்பு குறித்து தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் உடன் நடைபெற்று வரும் ஆலோசனையில் போக்குவரத்து துறை செயலாளரும் பங்கேற்றுள்ளார்.

ஜனவரி 9ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்த நிலையில் இந்த ஆலோசனை நடைபெற்று வருகிறது. ஊதிய உயர்வு உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளது. அதேவேளையில் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தாலும் தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் தொடர்பாக மீண்டும் பேச்சு வார்த்தை நடத்த வருமாறு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உடனான ஆலோசனைக்கு பிறகு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

mkstalin urgent discuss about transport unions strike


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->