இன்று முதல் அமலுக்கு வரும் முக்கிய நிதி மற்றும் நிர்வாக நடைமுறை மாற்றங்கள்! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பொதுமக்களின் அன்றாட நிதி மற்றும் நிர்வாக நடைமுறைகளில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஆறு முக்கிய மாற்றங்கள் இன்று முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளன. வருமான வரித் தாக்கல், ஆதார் அட்டை புதுப்பித்தல், பாஸ்போர்ட் கட்டணம் மற்றும் வங்கி விதிமுறைகள் எனப் பல்வேறு துறைகளில் இந்த புதிய விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

1. வருமான வரித் தாக்கல் புதிய காலக்கெடு
நடப்பு 2026-27 ஆம் மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அட்டவணையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, சம்பளம் பெறும் தனிநபர்கள் தங்களின் ஐடிஆர்-1 மற்றும் ஐடிஆர்-2 படிவங்களை ஜூலை 31, 2026-க்குள் சமர்ப்பிக்க வேண்டும். வணிகம் மற்றும் இதர பிரிவினருக்கான ஐடிஆர்-3 மற்றும் ஐடிஆர்-4 படிவங்களைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 31, 2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேதிகளுக்குள் தாக்கல் செய்யத் தவறினால் அபராதம் விதிக்கப்படும்.

2. இலவச ஆதார் மின்னஞ்சல் புதுப்பிப்பு
இந்திய தனி அடையாள ஆணையம் (UIDAI) ஆதார் மொபைல் செயலி மூலமாக மின்னஞ்சல் முகவரியைப் புதுப்பிப்பதற்கான 75 ரூபாய் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்துள்ளது. இந்த இலவசச் சலுகை 2026 டிசம்பர் 31 வரை பொதுமக்களுக்குக் கிடைக்கும்.

3. பாஸ்போர்ட் விண்ணப்பக் கட்டண உயர்வு
புதிய பாஸ்போர்ட் விண்ணப்பிப்பதற்கான கட்டணங்கள் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளன. இதன்படி புதிய பாஸ்போர்ட் பெற சுமார் 5,000 ரூபாயும், 60 பக்கங்கள் கொண்ட சாதாரண பாஸ்போர்ட்டைப் பெற 3,500 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

4. வங்கி தயாரிப்புகளின் தவறான விற்பனைக்கு தடை
நிதித் தயாரிப்புகளை வாடிக்கையாளர்களின் முறையான அனுமதியின்றி அல்லது தவறான தகவல்களுடன் விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது ரிசர்வ் வங்கி கடுமையான விதிகளை அமலாக்கியுள்ளது. இத்தகைய தவறான விற்பனை நிரூபிக்கப்பட்டால் முழுத் தொகையையும் திருப்பித் தருவதுடன் வாடிக்கையாளருக்கு நஷ்டஈடும் வழங்க வேண்டும். மேலும், விளம்பர மற்றும் மார்க்கெட்டிங் அழைப்புகளுக்கும் கடுமையான நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

5. கிரெடிட் கார்டு மற்றும் லவுஞ்ச் வசதி மாற்றங்கள்
எச்டிஎப்சி கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் இலவச விமான நிலைய உள்நாட்டு லவுஞ்ச் வசதியைப் பெற முந்தைய காலாண்டில் குறைந்தபட்சம் 60,000 ரூபாய் செலவிட்டிருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அப்போதுதான் அடுத்த காலாண்டில் 3 முறை இந்த வசதியைப் பெற முடியும்.

அதேபோல், போன்பே எஸ்பிஐ கிரெடிட் கார்டுகளின் (பர்ப்பிள் மற்றும் செலக்ட் பிளாக்) ரிவார்டு புள்ளிகள் திட்டத்தில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி மாதாந்திர ரிவார்டு புள்ளிகளுக்கு உச்சவரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதுடன், ரிவார்டு புள்ளிகள் வழங்கப்படாத பரிவர்த்தனைகளின் பட்டியலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

New Financial Regulations and Administrative Changes Effective in 2026


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->