இலங்கை கடற்கொள்ளையர்களால் படுகாயமடைந்த தமிழக மீனவருக்கு நிவாரணம் அறிவித்த முதல்வர் ஸ்டாலின்.!
MK Stalin relief fund announce to fisherman murugan
நாகப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் கடந்த பிப்ரவரி 14ம் தேதி நள்ளிரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கே இந்திய எல்லையில் நாகை மீனவர்கள் 6 பேர் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு 4 இலங்கை படகுகளில் வந்த 12 கடற்கொள்ளையர்கள் நாகை மீனவர்களின் படகை சுற்றி வளைத்தனர்.
மேலும், கையில் வைத்திருந்த இரும்பு பைப், கத்தி, தடி போன்ற ஆயுதங்களால் நாகை மீனவர்களை கொடூரமாக தாக்கியுள்ளனர். மேலும் நாகை மீனவர்களின் படகில் இருந்த மீன்கள், வலை, ஜிபிஎஸ் கருவி, செல்போன்கள் உள்ளிட்ட சுமார் 5 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர்.
இதனையடுத்து சக மீனவர்களின் உதவியோடு நாகை மீனவர்கள் புஷ்பவனம் கடற்கரைக்கு வந்து சேர்ந்தனர். அங்கு பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்னர்.
இந்த நிலையில் தமிழக மீனவர்கள் மீது இலங்கையைச் சேர்ந்தவர்கள் நடத்திய தாக்குதல் சம்பவம் குறித்து வெளியுறவுத் துறை அமைச்சருக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். மேலும், படுகாயம் அடைந்த நாகை மீனவர் முருகனுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 50,000 ரூபாய் வழங்கிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
English Summary
MK Stalin relief fund announce to fisherman murugan