பரபரக்கும் அரசியல் களம்.. ஸ்டாலின் தலைமையில் ஒன்று கூடும் அமைச்சர்கள்.. எகிறும் எதிர்பார்ப்பு.!! - Seithipunal
Seithipunal


கடந்த 7 மற்றும் 8- உள்ளிட்ட தேதிகளில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் ரூ.6 லட்சத்து 64 ஆயிரம் கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இதையடுத்து வருகிற 23-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதவது:-

"சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சரவை அறையில் 23-ந் தேதி காலை 11 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என்றும் அந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் பொருள்கள் குறித்த விவரம் தனியாக அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்த அறிவிப்பின் படி, 23 ஆம் தேதியான இன்று காலை 11 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 28-ந் தேதி வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளும் சூழ்நிலையில் இந்த அமைச்சரவை கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ministers cabinate meeting in chennai


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->