"பாஜக ஆட்சி நடந்ததால் தான்"... - மேடையில் கிண்டலடித்து உதயநிதி.! - Seithipunal
Seithipunal


சென்னை புத்தக கண்காட்சியில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் எழுதிய "கொரோனா.. உடல் காத்தோம்.. உயிர் காத்தோம்.." என்கிற புத்தக வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துக் கொண்டு பேசினார். 

அப்போது அவர் பேசியதாவது:- "கொரோனா நோய் குறித்து புத்தகங்களில் நிறைய வெளிவர வேண்டும். இல்லையென்றால் ஒரு 20, 30 ஆண்டுகளுக்குப் பிறகு, உலகம் முழுவதும் கொரோனா வந்தது. அப்போது பாஜக ஆட்சி செய்தது. மோடி ஆட்சி செய்தார். அதனால்தான் இந்தியாவிற்கு கொரோனா வரவில்லை என்று சொன்னாலும் சொல்வார்கள்" என்று கிண்டல் செய்யும் விதமாக பேசியுள்ளார்.

மேலும் இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். அதாவது, "அரசின் மருத்துவத்துறை மட்டுமின்றி எழுத்துத் துறையிலும் முத்திரைப் பதித்து வரும் மாண்புமிகு அமைச்சர் அண்ணன் திரு. @Subramanian_ma அவர்கள் எழுதிய “கொரோனா - உடல் காத்தோம்.. உயிர் காத்தோம்” என்னும் புத்தகத்தையும், அதன் ஆங்கில பதிப்பான "Corona Chronicles"-ஐயும் சென்னை புத்தகக் காட்சியில் இன்று அதாவது (13 -01 -2024 ) வெளியிட்டோம். 

அவற்றை மூத்த பத்திரிகையாளர் திரு. @nramind அவர்கள் மற்றும் தலை சிறந்த மருத்துவர் திரு.மோகன் காமேஸ்வரன் அவர்கள் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். 2021-ல் கழக அரசு அமைந்த போது, நம் கண் முன் பெரும் சவாலாக கொரோனா 2- ஆம் அலை வேகமெடுத்து இருந்தது. 

அந்தப் பெருந்தொற்றை அறிவியலின் துணையோடு நம் கழக அரசு முறியடித்த வரலாற்றை ஆவணப்படுத்தியுள்ளார் அண்ணன் மா.சு அவர்கள். கொரோனா ஒழிப்புக்கான கையேடு என்று சொல்கிற வகையில் மிகச்சிறப்பான முறையில் இந்த புத்தகங்களை வெளிக்கொண்டு வந்துள்ள அவருக்கு என் வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister uthayanithi stalin speech minister m subramanian book published function


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->