அண்ணாமலையிடமிருந்து பதக்கம் வாங்க மறுத்த அமைச்சர் TRB ராஜாவின் மகன் - கொந்தளித்த தமிழிசை!
Minister TRB Raja son refuses to accept medal from Annamalai Tamilisai outraged
புதுக்கோட்டை மாவட்டம் ஆவாரக்குடிபட்டியில் நடைபெற்று வரும் 51வது மாநில அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பரபரப்பு நிலை ஏற்பட்டது.
இந்த போட்டியில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக பங்கேற்று, வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு பதக்கங்களை அணிவித்து கௌரவித்தார்.
ஆனால், அப்போது பதக்கம் பெற்றவர்களில் ஒருவரான, அமைச்சர் TRB ராஜாவின் மகன் சூரிய ராஜபாலு, அண்ணாமலையிடமிருந்து பதக்கத்தை கழுத்தில் அணிய மறுத்து, அதை கையில் மட்டும் பெற்றுக்கொண்டார். பின்னர் புகைப்படத்திற்காக மட்டுமே நின்றதால், நிகழ்ச்சியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர்,"ஆளுநர் அல்லது அண்ணாமலை போன்ற சிறப்பு விருந்தினர்களை கல்வி நிறுவனங்கள் தகுதிக்கு ஏற்ப அழைக்கின்றன. அவர்களுக்கு மரியாதை தருவது, விருது பெறுபவர்களின் கடமை. அந்த நேரத்தில் தனிப்பட்ட உணர்வுகளை வெளிப்படுத்துவது சரியல்ல. திமுக எல்லாவற்றிலும் அரசியல் செய்கிறது. இந்தக் காழ்ப்புணர்ச்சி அரசியலை கைவிட வேண்டும்,"
என்று வலியுறுத்தினார். மேலும்,"TRB ராஜா, தனது மகனை அழைத்து பரபட்சமாக நடக்கக் கூடாது என்று அறிவுரை வழங்க வேண்டும்,"என்றும் தெரிவித்துள்ளார்.
English Summary
Minister TRB Raja son refuses to accept medal from Annamalai Tamilisai outraged