தொடர் சாதனையில் தமிழகம் - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளியிட்ட முக்கிய தகவல்.!
minister trb raja announce tamilnadu achive record electronics export
கடந்த 2024-25 நிதியாண்டில் மின்னணு ஏற்றுமதியில் தமிழகம் 14.65 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டி வரலாற்று சாதனை படைத்துள்ளது என்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:-
"கடந்த 2024-25 நிதியாண்டில் மின்னணு ஏற்றுமதியில் தமிழகம் 14.65 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டி வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்த உயர்வு இந்தியாவின் மொத்த மின்னணு ஏற்றுமதியில் 41.23 சதவீதம் அதிகமாகும். மாநிலத்தின் ஒட்டுமொத்த மின்னணு சுற்றுச்சூழல் அமைப்புக்கும் வாழ்த்துகள். இது உண்மையிலேயே பெருமைக்குரிய தருணம்.
கடந்த ஆண்டு 9.56 பில்லியனிலிருந்து இந்த ஆண்டு 14.65 பில்லியனாக 53 சதவீதம் மகத்தான வளர்ச்சி. இது வெறும் ஆரம்பம் தான். மின்னணு ஏற்றுமதியில் 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இதோ வருகிறோம்" என்றுத் தெரிவித்தார்.
English Summary
minister trb raja announce tamilnadu achive record electronics export