திடீர் மின் வெட்டு.. அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நேற்று பல்வேறு மாவட்டங்களில் திடீரென மின்வெட்டு ஏற்பட்டது. இரவு 8 மணி அளவில் தொடங்கிய மின்வெட்டு இரண்டு மணி நேரம் வரை நீடித்தது. சில இடங்களில் மின்சாரம் வருவதும் போவதுமாக இருந்தது. 

குறிப்பாக கடலூர், விருத்தாசலம், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த மின்வெட்டு அதிக அளவில் ஏற்பட்டது. தற்போது கோடை வெப்பம் வாட்டி வதைக்கும் நிலையில், திடீர் மின்வெட்டால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள். 

இது தொடர்பாக மின் வாரியத்தில் புகார் அளிக்கப்பட்டது. சிலர் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை டேக் செய்து டுவிட்டரில் மின்வெட்டு தொடர்பாக புகார் அளித்தனர். மேலும் திமுகவின் 2006 - 2011ஆம் ஆண்டு ஆட்சியை நினைவுபடுத்துவதாக கருத்துக்களை பதிவிட்டனர்.

இதுகுறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில், இன்றிரவு மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் சுமார் 750 MW திடீரென தடைபட்டது.  இதன் காரணமாக சில இடங்களில் ஏற்பட்ட மின்பற்றாக்குறையை சமாளிக்க  நமது வாரியத்தின் உற்பத்தித்திறனை உடனடியாக அதிகரித்தும். தனியாரிடமிருந்து கொள்முதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.  

இதனால் நகர்பபுறங்களில் உடனடியாக நிலைமை சரி செய்யப்பட்டது. ஊரகப் பகுதிகளிலும் அடுத்த 15 நிமிடங்களில் நிலைமை சீரடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என விளக்கம் அளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

minister senthil balaji says about power cut


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->