1000 யூனிட் இலவச மின்சாரம் - அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு!
Minister Senthil Balaji say about free 1000 unit power
தமிழ்நாடு விசைத்தறியாளர்களுக்கு இலவச மின்சாரம் 750 யூனிட்டிலிருந்து 1000 யூனிட்டாக உயர்த்தப்படுவதாக, அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டியளித்துள்ளார்.
மேலும் கைத்தறி நெசவுக்கு 200 யூனிட் இலவசம் என்பது 300 யூனிட்டாக உயர்த்தப்படுகிறது என்றும், அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டியளித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது, ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கான பணி நடந்து வருகிறது. ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்ட பின்பு, விரைவில் மாதாந்திர கணக்கீடு எடுக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படும்" என்று அமைச்சர் செந்திபாலாஜி தெரிவித்திருந்தார்.

மேலும், விசைத் தறிகளுக்கு தற்போது வழங்கப்படும் 750 யூனிட் இலவச மின்சாரம், விரைவில் 1,000 யூனிட்டாக உயர்த்தப்படும்" என்று ஒரு அறிவிப்பையும் வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில், இன்று கரூரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, "தமிழ்நாடு விசைத்தறியாளர்களுக்கு இலவச மின்சாரம் 750 யூனிட்டிலிருந்து 1000 யூனிட்டாக உயர்த்தப்படுகிறது. கைத்தறி நெசவுக்கு 200 யூனிட் இலவசம் என்பது 300 யூனிட்டாக உயர்த்தப்படுகிறது" என்று அறிவித்துள்ளார்.
English Summary
Minister Senthil Balaji say about free 1000 unit power