நாளை முதல் பொங்கல் விடுமுறை?! அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி!  - Seithipunal
Seithipunal


இந்த வருடம் தைப்பொங்கல் பண்டிகையானது போகி பண்டிகை முதல் காணும் பொங்கல் வரை ஜனவரி 14-ஆம் தேதி செவ்வாய்க் கிழமையில் இருந்து ஜனவரி 17ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரை கொண்டாடப்படுகிறது. இந்த நாட்களில் அதாவது நான்கு நாட்களும் தமிழக அரசால் அரசு விடுமுறையாக அறிவிக்கபடும் நிலையில், திங்கள்கிழமை உள்ளூர் விடுமுறை அளித்து ஒரு வாரம் தொடர்ச்சியாக பொங்கல் விடுமுறை அறிவிக்கப்படலாம் என பேச்சுகள் எழுந்து வருகிறது. 

இந்த நிலையில் திங்கள்கிழமை விடுமுறை அளித்து நாளை முதல் ஒரு வார காலத்திற்கு பொங்கல் விடுமுறை அளிக்கப்படுமா? என்பது குறித்து நாளை முதலமைச்சருடன் கலந்து ஆலோசித்து அறிவிக்க இருப்பதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். திங்கள்கிழமை உள்ளூர் விடுமுறையாக அறிவித்து அடுத்த நான்கு நாட்களும் பொங்கல் விடுமுறையோடு அதற்கடுத்த இரண்டு நாட்கள் சனி ஞாயிறு என்பதால் தொடர்ச்சியாக 8 நாட்கள் விடுமுறை வரும் என பள்ளி கல்லூரிகளில் உள்ள அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். 

அதேபோல 8 நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை என்றால் நகரங்களில் மாநகரங்களில் வசிக்கும் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று மகிழ்ச்சியாக பொங்கல் கொண்டாடி வர வசதியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை முதல் பொங்கல் விடுமுறை தொடங்குமா அல்லது 14-ம் தேதி போகி பண்டிகை முதல் பொங்கல் விடுமுறை தொடங்குமா என்பது நாளை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்த பிறகே தெரியவரும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister senkottaiyan about pongal holidays


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->