அரசியல் நோக்கத்திற்காக தான் பிரதமர் தமிழகம் வருகிறார் - அமைச்சர் சேகர் பாபு காட்டம்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது:- "கடந்த ஆண்டு இறுதியில் மிக்ஜாம் புயலால் சென்னை உட்பட தென்மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட போது ஒரு முறை கூட எட்டிப்பார்க்காத பிரதமர் மோடி, தற்போது தமிழ்நாட்டிற்கு இத்தனை முறை வருவது அவரின் அரசியல் லாபம் நோக்கம் கருதிதான்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைப்பதற்கு இதுவரை ஒரு சல்லிக்காசுக்கூட நிவாரண நிதியாக தமிழ்நாட்டிற்கு தராமல் வஞ்சிக்கின்ற பிரதமருக்கு, வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு மக்கள் பாடம் புகட்டுவார்கள். திராவிட முன்னேற்றக் கழகமும், திராவிட மாடல் ஆட்சியும் அவர்களுக்கு வயிற்றில் புளியை கரைக்கிறது. அதே போல இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மானசரோவர் மற்றும் முக்திநாத் ஆகியவற்றிற்கு ஆன்மிகப் பயணம் சென்று வருபவர்களுக்கு ஆண்டுதோறும் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ் கடவுள் என்று போற்றப்படுகின்ற முருகப் பெருமான் வீற்றிருக்கும் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகியவற்றிற்கு மூத்த குடிமக்கள், ஒரேமுறையாக சென்று தரிசனம் செய்திடும் வகையில் கட்டணமில்லாமல் 60 வயது முதல் 70 வயதிற்குட்பட்ட 200 பக்தர்கள் வீதம் ஆண்டிற்கு 5 முறை அதாவது 1,000 பக்தர்களை அழைத்து சென்று தரிசனம் செய்து வைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, இதன் முதற்கட்டப் பயணம் கடந்த ஜன.28ம் தேதி சென்னை, கந்தக்கோட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்டது" என்றுத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

minister sekar babu press meet about pm modi


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->