அஜித்குமார் குடும்பத்துக்கு  நிவாரண நிதி வழங்கிய அமைச்சர் பெரியகருப்பன்!  - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி, கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.கேஆர்.பெரியகருப்பன் திருப்புவனம் வட்டம், மடப்புரம் கிராமத்தில்மரணம் அடைந்த அஜித்குமார் குடும்பத்தினருக்குரூபாய் 07.50 இலட்சம் நிவாரண நிதிக்கான காசோலையினை நேரில் சென்று வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின்  சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், மடப்புரம் கிராமத்தில் மரணம் அடைந்த செல்வன் அஜித்குமார்  குடும்பத்தாரிடம் அலைபேசியின் வாயிலாக தொடர்பு கொண்டு, தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வதாகவும், அக்குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாகவும் தெரிவித்தார்கள்.
அதனைத்தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர்  உத்தரவிற்கிணங்க கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.கேஆர்.பெரியகருப்பன்  கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையினை, மறைந்த அஜித்குமார் சகோதரரான நவீன்குமார் (வயது 27) அவர்களுக்கு, சிவகங்கை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம் லிட், (காரைக்குடி) டெக்னீசியன் பணியிடத்திற்கென வழங்கினார்.

அக்குடும்பத்தினரின் கோரிக்கைக்கிணங்க மதுரையிலுள்ள ஆவின் நிறுவனத்தில் பணி நியமன ஆணையினை மாற்றி வழங்கிடவும், முன்னதாக இக்குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட வீட்டு மனை பட்டா தொடர்பாக, மாற்று இடம் வேண்டி விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை தொடர்பாகவும், உரிய நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில்,  தமிழ்நாடு முதலமைச்சர்  அறிவிப்பிற்கிணங்க,  கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.கேஆர்.பெரியகருப்பன்  அக்குடும்பத்தினருக்கு ரூபாய் 07.50 இலட்சம் நிவாரண நிதிக்கான காசோலையினையும்   சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கா.பொற்கொடி தலைமையில், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ.தமிழரசி ரவிக்குமார் அவர்கள் முன்னிலையில் நேரில் சென்று வழங்கி ஆறுதல் கூறி, அக்குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக தெரிவித்தார்.இந்நிகழ்வின் போது, சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் திரு.விஜயகுமார், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் திரு.சேங்கைமாறன், திருப்புவனம் வட்டாட்சியர் திரு.விஜயகுமார் உட்பட பலர் உடனிருந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Minister Periyakaruppan has provided relief funds to the Ajithkumar family


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->