ஆவின் பால் விலை ஏறியதற்கு விளக்கம் கொடுத்த அமைச்சர் மனோ தங்கராஜ்...!
Minister Mano Thangaraj explains rise in AAVIN milk prices
சென்னை நந்தனம் ஆவின் இல்லத்தில் பால் வளத்துறை அமைச்சர் ''மனோ தங்கராஜ்'' அவர்கள், ஆவின் முகவர்களுக்கு உறைகலன் வழங்குதல், ஆவின் பாலங்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்களுக்கு ஆணையை வழங்கினார்.

அதன் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் தெரிவித்ததாவது,"சென்னையில் 30 % ஆவின் விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ரூ.25 கோடி எட்டிய நிலையில், இந்தாண்டு, ரூ.33 கோடியை தொடுகிற வகையில் ஆவின் விற்பனை அதிகரித்துள்ளது.
இதேபோல் தமிழகத்திலுள்ள பல்வேறு இடங்களில் ஆவின் விற்பனையை அதிகரிக்க முயற்சி மேற்கொண்டு வருகிறோம்" என்று தெரிவித்தார்.
மேலும் இந்த நிகழ்வின்போது, பால்வளத்துறை ஆணையர் மற்றும் அமுதா, மேலாண்மை இயக்குனர் ஆ.அண்ணாதுரை உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
மேலும் பால் விலை அதிகரித்தற்கு விளக்கம் கொடுத்ததோடு,அவற்றினை எப்படி அதிக அளவில் விற்பனை செய்துமக்களிடம்கொண்டு சேர்ப்பது என்ற முழு தகவலையும் பகிர்ந்தனர்.
English Summary
Minister Mano Thangaraj explains rise in AAVIN milk prices