ஆவினில் குழந்தை தொழிலாளர்கள் விவகாரம்.. "அதிர்ச்சியடைய ஒன்றுமில்லை".. அமைச்சரின் விளக்கத்தால் வெடித்த சர்ச்சை..!!
Minister Mano Thangaraj controversial statement on aavin child labor
சென்னை அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி இருந்தது. குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியதும் இல்லாமல் செய்த வேலைக்கு ஊதியம் வழங்கவில்லை எனக் கூறி 30க்கும் மேற்பட்ட குழந்தை தொழிலாளர்கள் அம்பத்தூர் ஆவின் பால்பண்ணை வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் ஏற்படுத்தியது.
தற்பொழுது தமிழக முழுவதும் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் 12 ஆம் வகுப்பு படித்து முடித்த சிறுவர் சிறுமிகளை ஆவின் நிறுவனத்தின் ஐஸ்கிரீம் பேக்கேஜ் இடத்தில் பணியாற்றி அவர்களுக்கு போதிய ஊதியம் வழங்காமல் ஆவின் நிறுவனத்தின் ஒப்பந்ததாரர் அலைக்கழித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார். அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் ஒப்பந்தத் தொழிலாளர்களாக சிறுவர்கள் பணியமர்த்தப்பட்டது குறித்து தனியா தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் "இந்த விவகாரத்தில் அதிர்ச்சி என சொல்வது எல்லாம் மிகைப்படுத்தப்பட்ட ஒன்று.
நான் பால்வளத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு ஒவ்வொரு ஆவின் பண்ணைகளுக்கும் சென்று சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறேன். இவர்கள் அனைவரும் ஒப்பந்ததாரர்களுக்கு கீழ் பணிபுரிகிறார்கள். ஆவின் நிறுவனத்திற்கும் ஒப்பந்ததாரருக்கும் இடையே பணம் பட்டுவாடா போன்ற பிரச்சனைகள் இருந்து வருகிறது.

கடந்த இரண்டு வாரங்களாக பல பிரச்சனைகளை முடித்து வைத்துள்ளேன். ஒப்பந்ததாரர்களுக்கு பணியாளர்களுக்கும் பண பட்டுவாடா செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளேன். மற்றவர்கள் குற்றம் சாட்டிய அளவுக்கு சிறார்கள் இருந்தார்களா என தெரியாது. ஒப்பந்ததாரருக்கும் ஒப்பந்த ஊழியர்களுக்கும் இடையே சில பிரச்சனைகள் இருந்து வருகிறது.
இன்று காலை ஒப்பந்த தொழிலாளர்கள் பணிக்கு வராததால் ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில் தற்பொழுது குழந்தை தொழிலாளர் குறித்தான செய்தி தற்பொழுது வந்துள்ளது. சம்பந்தப்பட்ட ஆவின் பண்ணைக்குச் சென்று உரிய விசாரணை நடத்தப்படும்" என பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம் அளித்துள்ளார். ஆவின் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் என்ற பெயரில் சிறார்கள் பணி அமர்த்திய சம்பவத்தில் அதிர்ச்சி அடைய ஒன்றும் இல்லை என பால்வளத் துறை அமைச்சர் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
English Summary
Minister Mano Thangaraj controversial statement on aavin child labor