சென்னை மாரத்தான் போட்டியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்..!! - Seithipunal
Seithipunal


சென்னை பெசன்ட் நகர் நேபியர் பாலத்தில் 20,000 பேருடன் தொடங்கிய பிரமாண்ட மாரத்தான் போட்டியை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இந்த மாரத்தான் போட்டியானது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறார்களின் மருத்துவ உதவிக்காக நடத்தப்படுகிறது. நேபியர் பாலத்தில் தொடங்கிய இந்த மாரத்தான் போட்டியானது 42கி.மீ, 32கி.மீ, 21கி.மீ, 10கிமீ என நான்கு பிரிவுகளாக நடைபெறுகிறது.

இதனால் சென்னையில் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாரத்தான் போட்டியில் சிறுவர்கள், இளம் வயதினர், பெரியவர்கள், மாற்றுத்திறனாளிகள் என பலதரப்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். மாரத்தான் போட்டி துவக்க விழாவில் அமைச்சர் மனோ தங்கராஜ், தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். தனியார் அமைப்பு சார்பில் நடைபெறும் இந்த மாரத்தான் போட்டியில் ஆண், பெண் என இரு பிரிவியிலும் வெற்றி பெறும் நபருக்கு ரூ.1 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Minister Ma Subramanian inaugurated the Chennai Marathon


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->