எங்க தலைமையில் கூட்டம் நடந்தாலே கிடாவெட்டு கறிவிருந்து தான்.. வெற்றிவாகை நமதே.. அதிமுக அமைச்சர் பேச்சு.! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில், 2021 ஆம் தேர்தலுக்கான வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தினை பால்வளத்துறை அமைச்சர் இராஜேந்திர பாலாஜி தலைமை தாங்கி நடத்தினர். இதன்போது பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாவது, 

" அதிமுக கூட்டம் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்றாலே அனைவருக்கும் மட்டன் சாப்பாடு, கிடா வெட்டு என்று இருக்கும். அனைவருக்கும் சாப்பாடு போட்டு அரசியல் செய்யும் ஒரேயொரு இயக்கம் அதிமுக தான். திமுகவில் ஐம்பெரும் தலைவர்கள் இருந்தாலும், இன்று அவர்கள் வடநாட்டு நபர்களை நம்பியுள்ள சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை மக்களிடம் தெரிவித்தால் ஓட்டு போடுவார்களா?. 

தேர்தல் சமயங்களில் இதனை பேசினால் அவதூறு வழக்கு போன்ற தேவையில்லாத பிரச்சனை வரும். இப்போது பேசிக்கொள்ளலாம். சில மாதங்கள் சென்றால் பல விஷயம் பேச முடியாது. தேர்தல் அறிவிப்பு வந்ததும் கொடுப்பதும் தெரியக்கூடாது.. வாங்குவதும் தெரியக்கூடாது. இரகசிய ஆலோசனை கூட்டம் எல்லாம் நடைபெறும். எப்படி வெற்றிவாகை சூடுவது என நமக்கு தெரியும்.

திமுகவிற்கு இந்த தேர்தலில் யாருடைய வாக்குகளும் கிடைக்காது. அண்ணா கட்சி துவங்கிய போது திமுக இல்லை. ஸ்டாலினின் பெயர் தமிழ் பெயரா?. ரஷ்ய நாட்டில் உள்ள பெயரை வைத்துக்கொண்டு, தமிழ் பேசும் தமிழர்களுக்கு உரிமையை கோரும் யோகிதை அவருக்கு கிடையாது. அதிமுகவிற்கு மட்டுமே தமிழருக்காக பேசும் உரிமை உள்ளது. துரோகங்கள் செய்த திமுகவை மக்கள் மறக்க மாட்டார்கள் " என்று பேசியுள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister KT Rajendra Balaji Speech Virudhunagar Party Meeting 19 November 2020


கருத்துக் கணிப்பு

சசிகலா வருகை அதிமுக-வை பாதிக்குமா?!Advertisement

கருத்துக் கணிப்பு

சசிகலா வருகை அதிமுக-வை பாதிக்குமா?!
Seithipunal