4 நாளா நான் தான் பேசுறேன் - தூய்மை பணியாளர்களின் குற்றச்சாட்டை மறுத்த அமைச்சர் கே.என்.நேரு.!!
minister kn nehru denied sanitation workers allegations
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட இரண்டு மண்டலங்களில் தூய்மை பணிகள் தனியார் மயமாக்கப்பட்டதை கண்டித்து சென்னை மாநகராட்சி முன்பு கடந்த 1-ந் தேதி முதல் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
தொடர்ந்து நடைபெற்று வரும் இந்தப் போராட்டம் இன்று 12-வது நாளை எட்டியுள்ளது. இந்த நிலையில், இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்புமாறு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.
-yeg94.png)
மேலும், சென்னை மாநகராட்சியும் பொதுநலம் கருதி, பணி பாதுகாப்பு குறித்த உண்மை நிலையை அறிந்து பணிக்கு திரும்புமாறு தூய்மை பணியாளர்களுக்கு வலியுறுத்தியுள்ளது.
ஆனால், சென்னை மாநகராட்சியின் அழைப்பை தூய்மை பணியாளர்கள் புறக்கணித்து உள்ளனர்.
தொடர்ந்து இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்கள், எங்கள் துறை அமைச்சரான கே.என்.நேரு எங்கே? என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அவர் சந்திக்காதது ஏன்? என்றும் கேள்வி எழுப்பி இருந்தனர்.
இந்த நிலையில், தூய்மை பணியாளர்களின் குற்றச்சாட்டு குறித்து அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்கள் சந்தில் பேசியதாவது:- "போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களை இதுவரை 4 முறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளேன். 4 நாட்களாக நான்தான் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன்.
எந்த தூய்மை பணியாளரையும் பணியை விட்டு நீக்கவில்லை. சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் விவகாரத்தில் முதலமைச்சர் விரைவில் நல்ல முடிவு எடுப்பார்" என்றுத் தெரிவித்தார்.
English Summary
minister kn nehru denied sanitation workers allegations