அப்பா 16 அடி பாய்ந்தால், மகன் 32 அடி பாய்ந்து வேலை செய்றாரே.. இதைவிட என்ன வேண்டும்?.. அமைச்சர் புகழாரம்.! - Seithipunal
Seithipunal


கைத்தறி துணிநூல் துறை அமைச்சர் காந்தி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினை புகழ்ந்து பேசினார்.

இராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க கட்சி தலைமை அலுவலகத்தில், நேற்று வாலாஜா ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய, மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுகம் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், இராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் மற்றும் கைத்தறி துணிநூல் துறை அமைச்சர் காந்தி கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் கட்சியினரிடையே வேட்பாளர்களை அறிமுகம் செய்து உரையாற்றினார். இந்த உரையின் போது, " திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்து 5 மாதங்கள் கூட நிறைவடையவில்லை. ஆனால், திமுக மக்களிடம் கூறிய வாக்குறுதியை மட்டுமல்லாது, பல்வேறு புதிய அறிவிப்பையும் முதல்வர் மு.க ஸ்டாலின் நிறைவேற்றுகிறார். 

ஒவ்வொரு நாளிலும் பல்வேறு புதிய திட்டங்கள் மக்களுக்காக அறிவிக்கப்பட்டு வருகிறது. இதனால் உலகளவில் பாராட்டுகளும் பெற்று வருகிறார். கடந்த காலத்தில் திமுக எதிர்க்கட்சியாக இருக்கையில், உள்ளாட்சி தேர்தலில் 60 % வெற்றி அடைந்தது. தற்போது 100 % வெற்றி பெரும்.

வரும் 50 வருடங்களுக்கு தமிழகத்தில் திமுகவின் ஆட்சியே தொடரும். தமிழகத்தில் மற்றொரு ஆட்சி அமைய வாய்ப்புகள் இல்லை. அன்றுள்ள பழமொழியை போல, தாய் 16 அடி பாய்ந்தால், குட்டி 32 அடி பாயும் என்பதை போல, மு.க ஸ்டாலின் என்ற தாய் 16 அடி பார்த்தால், உதயநிதி என்ற குட்டி 32 அடி பயந்து பணியாற்றி செயலாற்றி வருகிறார் " என்று பேசினார். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Minister Gandhi Spoke in praise about Udhayanidhi Stalin 25 Sep 2021


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->