எல்லா பணிகளும் திருப்தியாக இருந்ததால் தான் காபி சாப்பிட்டேன் -துரைமுருகன்! - Seithipunal
Seithipunal


மழைக்கால வெள்ள தடுப்பு பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் துரைமுருகன்!

சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைக்கால வெள்ளத்தடுப்பு பணிகளை அமைச்சர் துரைமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் அதிகாரிகளுடன் சேர்ந்து ஆய்வு செய்தனர். இந்த ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது "சென்னையில் மழைக்கால வெள்ளத்தடுப்பு பணிகள் மற்றும் கால்வாய் அமைக்கும் பணிகளில் அதிகாரிகள் மும்முரமாக வேலை செய்ததால் பல இடங்களில் 95 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது. ஒரு சில இடங்களில் மட்டுமே 90 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது. மீதம் இருக்கும் வேலைகளையும் முடித்து விட வேண்டும் என்பதற்காக நானும் பல இடங்களில் ஆய்வு செய்தேன். முதல்வர் ஸ்டாலினும் இருமுறை ஆய்வினை மேற்கொண்டுள்ளார். 

மாவட்ட ஆட்சித் தலைவரும் நீர்வளத்துறை செயலாளரும் இப்பணிகளை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். மீதம் இருக்கும் பணிகளை இன்னும் ஆறு நாட்களில் முடித்துவிட வேண்டும் என சொல்லியிருக்கிறேன். சில பணிகள் தான் 10 நாட்களுக்கு மேல் ஆகும். இந்த ஆண்டு சென்னையில் வெள்ளப்பெருக்கு இருக்காது. மழைநீர் வடிந்து கால்வாய்களின் வழியாக கடலில் போய் சேர்ந்து விடும்" என தெரிவித்தார். அப்பொழுது செய்தியாளர் ஒருவர் ஆய்வு மேற்கொண்டு வரும் உங்களுக்கு எல்லா ஏற்பாடுகளும் பணிகளும் திருப்திகரமாக உள்ளதா என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன் "திருப்தியாக இருந்ததால் தான் காபி சாப்பிட்டேன்" என கிண்டலாக பதில் அளித்தார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister Durai Murugan inspected the monsoon flood prevention works


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->