சுரங்க கற்கள் வெட்டி எடுக்கும் நபா்கள் உரிமைத் தொகை கட்டணம் மீதான ஜிஎஸ்டி வரியைச் செலுத்த வேண்டும்! தமிழக அரசு அறிவுறுத்தல்.! - Seithipunal
Seithipunal


சுரங்க கற்களை வெட்டி எடுக்கும் நபர்கள் உரிமைத் தொகை கட்டணம் மீதான ஜிஎஸ்டி வரியை செலுத்த வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

இதுகுறித்து வணிகவரித்துறை ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சுரங்க கட்டட கற்கள் வெட்டி எடுக்கும் உரிமை பெற்று மலை மணல், கருங்கல் ஜல்லி, கருங்கல் போன்ற கனிமங்களை உற்பத்தி செய்து வருகின்றனர்.

சுரங்க கற்களை வெட்டி எடுக்கும் உரிமை பெற்ற நபர்கள் அரசுக்கு உரிமை தொகை கட்டணம், உரிம வரி கட்டணம் ஆகியவற்றை செலுத்தி வருகின்றனர். ஆனால் அந்தத் தொகை மீதான ஜிஎஸ்டி வரியை அரசுக்கு செலுத்த வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஜிஎஸ்டி வரியை செலுத்துவது தவறும் பட்சத்தில் தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவை வரி சட்டத்தின் கீழ் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Miners should pay GST


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->