மிக்ஜம் புயல் பாதிப்பு: ரேஷன் அட்டை இல்லாதோருக்கும்  நிவாரணம்?  - Seithipunal
Seithipunal


சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களும் மிக்ஜம் புயல் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டது. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிவாரண உதவியாக ரூ.  6000 வழங்க உத்தரவிட்டார். 

இதனை தொடர்ந்து ரேஷன் கடைகள் மூலம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. மேலும் குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு, வருமான வரி செலுத்துவோர், அரசு ஊழியர் ஊழியர்கள் ஆகியவர்களுக்கு நேரடியாக நிவாரண தொகை வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டிருந்தது. 

மேலும் இவர்கள் தனியாக விண்ணப்பித்து தங்களது பாதிப்புகளை எடுத்துரைத்து நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டது. 

ரேஷன் கடைகள் மூலம் விண்ணப்ப படிவம் வழங்கப்படும் நிவாரணத் தொகை பெறாதவர்கள் தங்களது பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ரேஷன் அட்டை இல்லாத 5.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் தகுதியானவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். 

இதனை தொடர்ந்து ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கு விரைவில் மிக்ஜம் புயல் நிவாரணம் வழங்கப்பட உள்ளது. நிவாரணம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mikjam storm damage Relief without ration cards


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->