21,135 கனஅடியாக அதிகரித்த மேட்டூர் அணையின் நீர்மட்டம்...!
Mettur Dam water level increased to 21135 cubic feet
கர்நாடகா மாநிலம் மற்றும் கேரளா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது.

இதில் நேற்று மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 17,906 கன அடி நீரவரத்து வந்தது. இதில் இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 21,135 கன அடியாக அதிகரித்து வந்தது.
இதன் நீர்மட்டம் 119.06 அடியாகவும், நீர் இருப்பு 91.97 டி.எம்.சி.யாகவும் இருக்கிறது.மேலும், அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 16,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
இதேபோல் கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
English Summary
Mettur Dam water level increased to 21135 cubic feet