தமிழகத்தின் உயிர்நாடி! பிரமாண்டமான மேட்டூர் அணையின் 90 வது பிறந்தநாள்! - Seithipunal
Seithipunal


டெல்டா விவசாயிகளுக்கு வெள்ளைக்காரன் நமக்கு விட்டுச் சென்ற வரப்பிரசாதமான மேட்டூர் அணை இன்று 90-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

மேட்டூர் அணையின் உண்மையான பெயர் என்ன? 
அதன் நீளம் எவ்வளவு?
அணையை காட்டியது யார்? எவ்வளவு வருடம் ஆனது? அதன் சிறப்புகள் என்னென்ன?
இப்படியான பல விவரங்களை இந்த செய்தி தொகுப்பில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

கர்நாடக மாநிலம், குடகு மலையில் உள்ள மெக்காரா எனும் இடத்தில் உற்பத்தியாகும் காவிரி ஆறு, தமிழகத்தில் மட்டும் 800 கிலோமீட்டர் தூரம் பயணித்து வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது. 

சரியாக 100 ஆண்டுகளுக்கு முன் ஜூன் முதல் ஆகஸ்டு வரை பெய்யும் தென்மேற்கு பருவமழையினால், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, விவசாய பயிர்கள் நாசம் அடைந்தன.

இதனை தடுக்க 1925-ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் மேட்டூர் பகுதியில் அணை கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டு, தலைமை வடிவமைப்பு மற்றும் கண்காணிப்பு என்ஜினீயர் கர்னல் டபிள்யூ.எல்.எல்லீஸ், அணை நிர்வாக என்ஜினீயர் வெங்கட்ராமையா, முதன்மை தலைமை என்ஜினீயர் முல்லிங் கஸ் ஆகியோர் தலைமையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அணை கட்டுமான பணியில் இரவு பகலாக ஈடுபட்டனர். 

சுமார் 9 ஆண்டுகள் மழை, வெள்ளம், வெயில் என பல இடர்களை தாண்டி, 1934-ம் ஆண்டு, ஜூலை மாதம், 17-ந் தேதி அணை காட்டும் பனி நிறைவடைந்தது. 

இந்த அணையை கட்டி முடிக்க அந்த காலத்திலேயே 4 கோடியே 80 லட்சம் ரூபாய் ஆனதாக சொல்லப்படுகிறது.

இந்த பிரமாண்ட அணையை அதே வருடம், ஆகஸ்டு மாதம் 21-ந் தேதி, சென்னை மாகாண ஆளுநராக இருந்த சர் ஜார்ஜ் பிரெடரிக் ஸ்டான்லி திறந்து வைத்தார். 

அவரின் நினைவாகவே இந்த அணைக்கு 'ஸ்டான்லி நீர்த்தேக்கம்' என்ற பெயரும் சூட்டப்பட்டது.

ஆனால், மக்கள் அன்று முதல் இன்றுவரை 'மேட்டூர் அணை' என்றே அழைக்கின்றனர். 

இந்த மேட்டூர் அணையின் நீளம் 5,300 அடி. 
அணையின் நீர்த்தேக்க பகுதி 59.25 சதுர மைல். 
அணையின் மொத்த கொள்ளளவு 93.5 டி.எம்.சி.
அணையின் உச்சபட்ச நீர்மட்டம் 120 அடி வரை நீரை தேக்கி வைக்க முடியும்.

இந்த அணையில் மேல்மட்ட மதகு, கீழ்மட்ட மதகு, மின் நிலை மதகு என 3 நிலை மதகுகள் உள்ளன. 

அணையின் நீர்மட்டம் 120 அடியை எட்டும் போது, உபரி நீர் திறந்து விட 16 கண் மதகுகள் உள்ளன. 

இந்த மதகுகள் ஒவ்வொன்றும் 20 அடி உயரம், 60 அடி நீளம் இருக்கும் என்றால் அணையின் பிரமாண்டத்தை நீங்களே யோசித்து பாருங்கள்.

இந்த மதகுகளை இயக்க 16 மின்மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மதகுகள் மூலம் வினாடிக்கு 4 லட்சத்து 410 கனஅடி நீரை வெளியேற்ற முடியும்.

இந்த அணையிலிருந்து அதிகபட்சமாக கடந்த 1965-ம் ஆண்டு வினாடிக்கு 3 லட்சத்து 1,052 கனஅடி தண்ணீர் வந்தது. 

கடந்த ஆண்டு அதிகபட்சமாக வினாடிக்கு 2 லட்சத்து 4 ஆயிரம் கனஅடி வரையும் தண்ணீர் வந்துள்ளது.

டெல்டா விவசாயிகளின் பாசனத்திற்காக ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்படும்.

சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், காரைக்கால், திருவாரூர், அரியலூர், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில், சுமார் 16 லட்சம் ஏக்கர் நிலங்களின் பாசனத்திற்காக ஆண்டுதோறும், ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும். 

தமிழக மக்களின் வளர்ச்சிக்கும், குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதிலும் மேட்டூர் அணை உயிர்நாடியாக விளங்குகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mettur dam 90 th birth day


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->