இவன் மனைவி, மகளை கூட்டத்தில் யாரேனும் இடித்தால், கூடவே அனுப்பி வைப்பான் போல - நடிகை கஸ்தூரி காட்டம்! - Seithipunal
Seithipunal


திருப்பதி கோவிலில் வழங்கப்படக்கூடிய லட்டில், மீன் எண்ணெய் மற்றும் மாட்டின் கொழுப்பு கலக்கப்பட்டு இருப்பதாக ஆய்வகப் பரிசோதனையில் உறுதி ஆகியது.

இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று திருப்பதி தேவஸ்தான போடுக்கு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இதற்கிடையே, சமூக வலைதளங்களில் திமுக மற்றும் திமுகவின் ஆதரவாளர்கள் இந்த விவகாரத்தை கையில் எடுத்து, சம்பந்தப்பட்ட இந்து மக்கள் புண்படும்படி கீழ்த்தரமாக நகைச்சுவை செய்து பதிவிட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

இதற்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில், திமுகவின் ஆதரவாளர் ரவி என்பவர் தனது சமூக வலைதள பக்கத்தில், தலைக்கு மேலே வெள்ளம் போன பிறகு, ஜான் என்ன முழம் என்ன?

ஒரு முறை திருப்பதி லட்டு சாப்பிட்டவர்கள், இனியும் காய்கறி உணவு பழக்கத்தை தொடர வேண்டுமா? என்று கேள்வி எழுப்பி பதிவிட்டு இருந்தார்.

இதனை நடிகை கஸ்தூரி தனது சமூகவலைத்தபக்கத்தில் பகிர்ந்து, இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில், "ஆகா.. என்ன ஒரு திராவிடிய பகுத்தறிவு! இவன் மனைவி, மகளை கூட்டத்தில் யாரேனும் இடித்தால், கூடவே அனுப்பி வைப்பான் போல. மூளைக்கு பதில் மலம் தானே இருக்கு மண்டையில். இனி அதையே உண்ணலாமே இதுகள். இதில் முழு சைவரான திருவள்ளுவர் படம் வேறு" என்று நடிகை கஸ்தூரி பதிலடி கொடுத்துள்ளார்.

நடிகை கஸ்தூரியின் இந்த பதிவு பலராலும் பகிரப்பட்டு வருகிறது. அதே சமயத்தில் நடிகை கஸ்தூரிக்கு திமுக ஆதரவாளர்கள் பின்னோட்டம் மூலமாக கடுமையான கண்டனத்தையும், பதில் விமர்சனத்தையும் தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress Kasturi Condemn to DMK Supporter Ravi for Lattu issue


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->