சென்னை உயர்நீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் நியமனம்.! - Seithipunal
Seithipunal


சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பணிபுரிந்து வந்த 5 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்தது. இதனை ஏற்று 5 கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.

அதாவது, நீதிபதி விக்டோரியா கவுரி, நீதிபதி பி.பி.பாலாஜி, நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன், நீதிபதி ஆர்.கலைமதி மற்றும் நீதிபதி கே.ஜி.திலகவதி உள்ளிட்டோர் நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ஷமீம் அகமது சென்னை உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் காலியிடங்களின் எண்ணிக்கை 12 ஆக குறைந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

five justice appointed in chennai high court


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->