பாலியல் புகாரை நிரூபித்தால் கணவரை விட்டு விலக தயார்- ஜானி மாஸ்டர் மனைவி!
Jani Master wife is ready to leave her husband if she proves the sexual complaint
தெலுங்கு திரைப்படத்தில் புட்ட பொம்மா பாடலின் மூலம் கவனம் பெற்ற நடன இயக்குனர் ஜானி மாஸ்டர், திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் சிறந்த நடன இயக்குநராக அறிவிக்கப்பட்டார். தொடர்ந்து நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக்குத்து, ரஜினியின் ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற காவாலா ஆகிய ஹிட் பாடல்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றியிருந்தார்.
இந்த நிலையில் ஆந்திர மாநில திரைப்பட நடன கலைஞராக இருக்கும் இளம்பெண் ஒருவர் தனது 16 வயதில் ஜானி மாஸ்டர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அளித்த புகாரின் பேரில், போலீசார் ஜானி மாஸ்டர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
இந்த நிலையில் ஜானி மாஸ்டரின் மனைவி சுமலதா அளித்த பேட்டியில், எனது கணவர் ஜானி மாஸ்டரும், அந்த பெண்ணும் நெருக்கமாக இருப்பதை யாராவது பார்த்தீர்களா என்றும், பலாத்காரம் செய்ததை நிரூபித்தால் நான் எனது கணவரை விட்டு விலக தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
English Summary
Jani Master wife is ready to leave her husband if she proves the sexual complaint