வெளியானது வேட்டையன் படத்தின் டீசர்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது தனது 170-வது படமான 'வேட்டையன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரிப்பில் த.செ.ஞானவேல் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், பகத் பாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படம் அக்டோபர் 10-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில், இந்தப் படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'மனசிலாயோ' பாடல் வெளியாகி வைரலானது. 

இந்த முதல் பாடலைத் தொடர்ந்து இந்த படத்தின் அடுத்த பாடலான "ஹண்டர் வண்டார்" பாடல் இன்று வெளியானது. இதை தவிர படத்தில் நடித்துள்ள கதாப்பாத்திரங்களை அறிமுகம் செய்யும் விதமாக படக்குழு வீடியோக்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், வேட்டையன் படத்தில் ரஜினியின் கதாபாத்திர வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. 

தற்போது வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நடிகர் ரஜினி நடித்த வேட்டையன் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனால், ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vettaiyan movie teaser released


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->