சென்னையில் மெட்ரோ சேவை நிறுத்தம்...பயணிகளின் சிரமத்துக்கு வருந்துகிறோம்!
Metro service in Chennai halted We apologize for the inconvenience to passengers
வருகிற 15-ந்தேதியில் இருந்து 19-ந்தேதி வரை மெட்ரோ ரெயில் சேவைகளில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வடபழனி மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு மேலே நடந்து வரும் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது , இதன்காரணமாக பச்சை வழித்தடத்தில் கோயம்பேடு முதல் அசோக் நகர் வரை மெட்ரோ ரெயில் சேவைகள் வருகிற 15-ந்தேதியில் இருந்து 19-ந்தேதி வரை தற்காலிகமாக மாற்றியமைக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீல வழித்தடத்தில் விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரை அண்ணாசாலை டி.எம்.எஸ் வழியாக இயக்கப்படும் சேவையில் நேரம் மற்றும் அட்டவணையில் எந்த மாற்றமும் இருக்காது என சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது .
ஆனால் பச்சை வழித்தடத்தில் மேற்கண்ட நாட்களில் காலை 5 மணி முதல் 6 மணி வரை பரங்கிமலையில் இருந்து அசோக் நகர் வரையிலும், விமான நிலையத்தில் இருந்து அசோக் நகர் வரையிலும் 14 நிமிட இடைவெளியில் ரெயில்கள் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளது . அதுமட்டுமல்லாமல் எம்.ஜி.ஆர். சென்டிரலில் இருந்து கோயம்பேடு வரை 7 நிமிட இடைவெளியில் ரெயில் சேவை நடக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
கோயம்பேடு முதல் அசோக் நகர் வரை 15-ந்தேதியில் இருந்து 19-ந்தேதி வரை காலை 5 மணி முதல் 6 மணி வரை தற்காலிகமாக சேவை நிறுத்தப்படுகிறது. பயணிகளின் வசதிக்காக கோயம்பேடு மற்றும் அசோக் நகர் இடையே 10 நிமிடங்களுக்கு ஒருமுறை சிறப்பு இணைப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. வாரநாள், சனிக்கிழமை, ஞாயிறு கால அட்டவணை பின்பற்றப்படும்.
பயணிகளின் சிரமத்துக்கு வருந்துகிறோம்.இந்த தற்காலிக மாற்றங்கள், 2-ம் கட்ட கட்டுமானப் பணிகள் சீராகவும், சரியான நேரத்திலும் நடப்பதற்கு அவசியமானவையாகிறது. பயணிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
English Summary
Metro service in Chennai halted We apologize for the inconvenience to passengers