முடி கொட்டிய மன உளைச்சல்... தூக்கில் தொங்கிய இளம்பெண்ணின் உயிர்! நெஞ்சை பதறவைக்கும் துயரம்...!
mental anguish that made my hair fall out life young woman who hanged herself Heartbreaking grief
தேனி மாவட்டத்தில் உடல்நலப் பிரச்சினையால் தலைமுடி முழுவதும் உதிர்ந்த நிலையில், மனவேதனைக்கு ஆளான 19 வயது இளம்பெண் வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள உப்பார்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா.

இவரது மகள் அஞ்சலி (19). கடந்த ஒரு மாதமாக அஞ்சலி புழுவெட்டு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
நோயின் பாதிப்பு காரணமாக அவரது தலைமுடி முழுவதும் உதிர்ந்ததாக கூறப்படுகிறது. இதனால் தனது தோற்றத்தில் ஏற்பட்ட மாற்றத்தை எண்ணி அஞ்சலி மனமுடைந்து காணப்பட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அஞ்சலி தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டார்.பின்னர் வீட்டுக்கு வந்த குடும்பத்தினர், அஞ்சலி உயிரிழந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
English Summary
mental anguish that made my hair fall out life young woman who hanged herself Heartbreaking grief