அதிமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்!
Members of the alternative party joined the AIADMK
பண்ருட்டியில் மாற்று கட்சியினர் 600 பேர் சத்யாபன்னீர்செல்வம் முன்னிலையில் அ.இ. அண்ணா தி.மு. கழகத்தில் இணைந்தனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகரில் கும்பகோணம் சாலையில் உள்ள தனியார் திருமன மண்டபத்தில் கடலூர் மாவட்ட முன்னாள். அம்மா பேரவை செயலாளரும், பண்ருட்டி முன்னாள். நகரமன்ற தலைவருமான ப.பன்னீர்செல்வம், அவர்களது ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,
கழகப் பொதுச் செயலாளர், புரட்சித்தமிழர் எடப்பாடியார் அவர்களின் தலைமையை ஏற்று, கழக மகளிரணி செயலாளர் பண்ருட்டி முன் சட்டமன்ற உறுப்பினர் சத்யா பன்னீர் செல்வம், முன்னிலையில்,
தமிழக வாழ்வுரிமை கட்சியின் பண்ருட்டி நகரம் (மேற்கு) நகர செயலாளர் இரா.மணி உள்ளிட்ட 350 பேர்களும்
அங்குசெட்டிபாளையம் அஸ்வின் தலைமையில் கிரி,சந்திரன்,உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து 250 பேர்களும்,இலுப்பைதோப்பு தவாகவை சேர்ந்த தொழிலதிபர்கள் பாலாஜி-புருஷோத் ஆக மொத்தம் 600 பேர்கள் தங்களை அ.இ. அண்ணா தி.மு. கழகத்தில் இணைத்துக் கொண்டனர். இணைந்தவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
கழகத்தில் இணைந்தவர்கள் 2026-ல் எடப்பாடியார் ஆட்சி அமைந்திட அயராது உழைப் போம் என உறுதி ஏற்றுக் கொண்டனர்.விழாவில் மாவட்ட, ஒன்றிய, நகர பேரூராட்சி கழகம் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் இந்நாள்,முன்னாள் உள்ளாட்சி அமைப்பு அமைப்பு பிரதிநிதிகள் முன்னால் கூட்டுறவு சங்க நிர்வாகிகள், மகளிர் அணியினர் தொழிற்சங்க நிர்வாகிகள் கழக முன்னோடிகள் என பெருந்திரளாக கலந்து கொண்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
English Summary
Members of the alternative party joined the AIADMK