எதிர் எதிரே மோதிய வாகனங்கள்.. பரபரப்பு சம்பவம்..!
Meet accident to vehicle in the road
நாமக்கல் மாவட்டம் முட்டாஞ்செட்டி சாலையில் 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பேருந்து ஒன்று வந்துள்ளது. அப்போது, அவ்வழியாக வந்த டிப்பர் லாரியும், அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பிரியா, தங்கராஜன், சந்திரா, தினேஷ்குமார், சுதா, பிரீத்தி, ராஜம்மாள், சரோஜா, செண்பகம், ரேவதி, கவிதா உள்பட 15 பேர் காயமடைந்தனர்.
அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
English Summary
Meet accident to vehicle in the road