தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள்.. வெளியாகப்போகும் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதையடுத்து மீண்டும் கட்டுப்பாடுகளை விதித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

தமிழகத்தில் கொரோனா நோய்த்‌ தொற்று பரவலைத்‌ தடுக்கும்‌ நடவடிக்கைகளை மேற்கொள்ளும்‌ வகையிலும்‌, பரவி வரும்‌ உருமாறிய கொரோனா ஒமைக்ரான்‌ வைரஸ்‌ நோயைக்‌ கருத்தில்‌ கொண்டும்‌ மற்றும்‌ பொது மக்கள்‌ நலன்‌ கருதியும்‌ நடைமுறையில்‌ உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள்‌ 10.1.2022 வரை நீட்டித்து உத்தரவிடப்படுகிறது.

பண்டிகைக்‌ காலங்களில்‌ பொதுமக்கள்‌ ஒரே நேரத்தில்‌, ஒரே இடத்தில்‌ கூடுவதால்‌ கொரோனா நோய்த்‌ தொற்று பரவல்‌ அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுநர்கள்‌ தெரிவித்துள்ளதைக்‌ கருத்தில்‌ கொண்டு பொது மக்கள்‌ நலன்‌ கருதி கீழ்க்கண்ட கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்குமாறு அன்புடன்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌.

சமுதாய, கலாச்சார மற்றும்‌ அரசியல்‌ கூட்டங்கள்‌ போன்ற பொது மக்கள்‌ கூடும்‌ நிகழ்வுகளுக்கு தற்போது நடைமுறையிலுள்ள தடை தொடரும்‌. மழலையர்‌ விளையாட்டு பள்ளிகள்‌, நர்சரி பள்ளிகள்‌ செயல்பட அனுமதி இல்லை. அனைத்து பள்ளிகளிலும்‌, 1ஆம்‌ வகுப்பு முதல்‌ 8ஆம்‌ வகுப்பு வரை 10.1.2022 முடிய நேரடி வகுப்புகள்‌ நடத்த தடை விதிக்கப்படுகிறது. அனைத்து பொருட்காட்சிகள்‌ மற்றும்‌ புத்தகக்‌ கண்காட்சிகள்‌ நடத்துவது தற்போது ஒத்திவைக்கப்படுகிறது என தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,728 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 121 பேருக்கு ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளது.100 பேர் டிஷ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 21 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இந்நிலையில், ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். தொற்று பரவல் அதிகம் உள்ள இடங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

may be omicron lockdown in tamilnadu


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->