அடுத்த ஆபத்து.. தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு.? - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இதன் காரணமாக கடந்த 1-ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மேலும் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டது. 

இதனிடையே, தமிழகம் முழுவதும் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேற்று முன்தினம் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை பின்பற்றவில்லை என புகார் எழுந்து உள்ளது. அதாவது முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது போன்ற கட்டுப்பாடுகளை அரசியல் கட்சியின் வேட்பாளர்களும், பொதுமக்களும் முறையாக கடைபிடிக்கவில்லை. இதன் காரணமாக வரும் நாட்களில் கொரோனா தொற்று  அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பொதுமக்கள் வெளியே செல்லும்போது முக கவசம் அணியாமல் அலட்சியமாக செல்கின்றனர். 

இந்நிலையில், பிரிட்டன் நாட்டில் ஒமைக்ரான் வைரஸ் தொற்றின் பரிமாணமான "பிஏ 2" வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இது அதி வேகமாகப் பரவக்கூடியது என்றும், அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடியது என்று ஜப்பான் நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த வைரஸ் தொற்று ஒமைக்ரான் தொற்றை போல் இந்தியாவிற்கும் பரவத் தொடங்கும் பட்சத்தில் தமிழகத்தில் மீண்டும்ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

may be lockdown for ba 2 virus


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->