மருதமலை கோயிலில் வெள்ளிவேல் திருட்டா? உண்மை என்ன? இந்து சமய அறநிலையத்துறை விளக்கம்!
Maruthamalai Murugan Temple Silver Veil Hindu Religious Endowments Department
மருதமலை கோவிலில் வெள்ளிவேல் திருடப்பட்டதாக செய்தி வெளியாக நிலையில், அது மருதமலை அடிவாரத்தில் தனியாருக்கு பாத்தியப்பட்ட தியான மண்டபத்தில் உள்ள வெள்ளிவேல் தான் திருடப்பட்டதாக இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.
கோவை மாவட்டம், மருதமலை. அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஐள குடமுழுக்கு நடைபெறும் நிலையில் ரூ. 4 லட்சம் மதிப்பிலான வெள்ளிவேல் திருட்டு என்று சில தொலைக்காட்சிகளில் செய்திகள் வெளிவருகின்றன.
கோவை மாவட்டம், பேரூர் வட்டம் மருதமலை அடிவாரத்தில் அமைந்துள்ள மருதமலை அடிவார வேல் கோட்ட தியான மண்டபத்தில் நேற்று இரவு சுமார் 11.45 மணியளவில் 3 கிலோ 100 கிராம் எடையுள்ள வெள்ளி வேல் கயவர்களால் களவாடப்பட்டுள்ளது.
இது தனியாருக்கு பாத்தியப்பட்ட தியான மண்டபம் ஆகும். இதன் நிர்வாகியாக குருநாதசாமி என்பவர் இருந்து வருகிறார்.
இந்த தியான மண்டபத்தில் வெள்ளி வேல் மட்டுமே இருந்து தியானம் செய்யப்பட்டு வந்துள்ளது.
மேற்கண்ட தியான மண்டபமானது இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான தியான மண்டபம் இல்லை.
மேலும், இந்த சம்பவம் மருதமலை திருக்கோயிலில் நடைபெறவில்லை என கோவை மண்டல இணை ஆணையர் பி.ரமேஷ் தெரிவித்துள்ளார்.
English Summary
Maruthamalai Murugan Temple Silver Veil Hindu Religious Endowments Department