சூடாக 'டீ' கேட்ட மாமியாரை இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்த மருமகள்.! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள மலைக்குடிபட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருக்கு கனகு என்ற பெண்ணுடன் திருமணமாகி ஆண் குழந்தை உள்ளது. சுப்பிரமணியன் பெற்றோரும் அதே கிராமத்தில் வசித்து வந்த நிலையில் சமீபத்தில் சுப்பிரமணியன் தந்தை காலமானார். 

அதனால் தனது தாய் பழனியம்மாளும் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால் சுப்பிரமணியன் தாயார் பழனியம்மாளுக்கும் மனைவி கனகவுக்கும் இடையே நிறைய பிரச்சினைகள் ஏற்பட்டு ஒத்துவரவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு அனைவரும் சாப்பிட்டுவிட்டு தூங்கி நிலையில் நள்ளிரவில் பழனியம்மாளுக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து தனது மருமகளிடம் சூடாக டீ போட்டு தர கேட்டுள்ளார். மருமகளும் தூக்க கலக்கத்தில் டீ போட்டு கொடுத்துள்ளார். ஆனால் டீ சூடாக இல்லாமல் ஆறிப்போய் இருந்ததால் பழனியம்மாள் மருமகளிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த மருமகள் அருகில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து மாமியார் தலையில் பலமாக தாக்கியுள்ளார்.

இதில் கத்தி கூச்சிலிட்ட பழனியம்மாளின் அலறல் சத்தத்தை கேட்டு எழுந்த மகன் சுப்பிரமணி மற்றும் அக்கம் பக்கத்தினர் உடனடியாக பழனியம்மாளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பழனியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பழனியம்மாள் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து மருமகள் கனகுவை கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Marugal attack killed in mamiyar in pudhukottai


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->