மெரினா கடற்கரையில் கற்சிலை மீட்பு! கோவிலில் இருந்து திருடப்பட்டதா? - Seithipunal
Seithipunal


பழங்கால சாமி சிலைகளை மீட்கும் பணிகளில் தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஈடுபட்டு வரும் நிலையில் சமீபத்தில் அமெரிக்க மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள பழங்கால சாமி சிலைகள் மீட்ட்கப்பட்டு தமிழகம் கொண்டுவரப்பட்டன. 

கோவில்களில் இந்த சிலைகள் ஒப்படைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் ஜூன் மாதம் துலுக்கானத்தம்மன் கோவில் எதிரே பழங்கால சாமி சிலைகள் மணல் பரப்பில் இரண்டு கிடைத்தன. 

இந்த சிலைகள் குறித்து பட்டினப்பகம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பின்னர் அப்பகுதியை சேர்ந்த தாசில்தாரிடம் சிலையை மீட்டு ஒப்படைத்தனர். 

இதேபோல் மெரினா போலீசார் கலங்கரை விளக்கம் பின்புறம் உள்ள கடற்கரையில் சுமார் ஒரு அடி உயரமுள்ள கற்சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

மெரினா போலீசார் மீட்கப்பட்ட சிலையை மயிலாப்பூர் தாசில்தாரிடம் ஒப்படைத்தனர். இதனை சிலை கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் கோவில்களில் இருந்து திருடி வந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணையை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

marina beach recovered stone statue


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->