கள்ளச்சாராய மரணம் 22 ஆக அதிகரிப்பு! திமுக அமைச்சருக்கு நெருங்கியவர் மீது குண்டர் சட்டம்! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தையடுத்த எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்திருக்கிறது. 

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தையடுத்த சித்தாமூரில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. 

விஷச்சாராயத்தை அருந்தி செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜம்பு, சங்கர் உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் ஒருவர் பலியாகியுள்ளார்.

இதனால் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 22ஆக அதிகரித்துள்ளது. 

இதற்கிடையே, தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பிறப்பித்த உத்தரவுப்படி, கள்ளச்சாராய மரண வழக்குகள் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்து தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், மரக்காணம் காவல் நிலைய வழக்கில் 8 எதிரிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இதில், திமுக நிர்வாகியும், அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு நெருங்கியவருமான கள்ளச்சாராய வியாபாரி மருவூர் ராஜா குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

marakanam madhuranthakam Kalla saraya death 22


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->