நாதக சீமானுக்கு இன்ஸ்டாகிராமில் கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது..!
Man who threatened to kill Seeman on Instagram arrested
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு நேற்று நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்திருந்தார். தேனியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பதிவில், சீமானின் தலை விரைவில் துண்டிக்கப்படும், தெலுங்கு பேசும் மக்களை தவறாக பொதுத் தளத்தில் பதிவிட்டால் அதற்கு முழு பொறுப்பு சீமான்தான். அதன் விளைவு மரணம் என்றும், விரைவில் நாதக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டி நிலவும் என பதிவிட்டு சீமானுக்கு கொலை மிரட்டல் விடுத்துதிருந்தார்.
அதனை தொடர்ந்து, மிரட்டல் விடுத்த சந்தோஷ் மீதும், அவரது பதிவை 'டேக்' செய்து பதிவிட்டுள்ள 04 நபர்கள் மீதும், அவர்கள் சார்ந்துள்ள இயக்கம் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக வேண்டும் எனசென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் புகார் அளித்தார்.
இந்த நிலையில், சீமானுக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆண்டிபட்டி ஜக்கம்பட்டியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவரை தேனி சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
English Summary
Man who threatened to kill Seeman on Instagram arrested