இளம் பெண்ணை பாலியல் வன் கொடுமை செய்த குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை..வேலூர் சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு! - Seithipunal
Seithipunal


வேலூரில் இளம் பெண்ணை பாலியல் வன் கொடுமை செய்த குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறைதண்டனையும், அதற்கு உதவியாக இருந்த பெண்ணுக்கு 10 ஆண்டுகள் சிறைதண்டனையும் விதித்து பாலியல் குற்றங்களை விசாரிக்கும்  சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

       வேலூர்மாவட்டம்,வேலூர் சதுப்பேரி பகுதியை சேர்ந்த இளம் பெண்ணிடம் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஜெகன் என்பவர் இன்ஸ்டாகிராமில் பழகியுள்ளார் .அவருக்கு துணையாக வேலூர் ஓல்டு டவுன் பகுதியை சேர்ந்த சாந்தினி என்பவரும் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் சாந்தினி  மற்றும் ஜெகன் இருவரும் திட்டம் தீட்டி கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி இளம் பெண்ணை ஜெகன் அவர் பெண் தோழி சாந்தினியின் உதவியோடு பாலியல் வன் கொடுமை செய்துள்ளார் .

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை அளித்த புகாரில்  கடந்த 17-8-2022 அன்று தெற்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ஜெகன் மற்றும் சாந்தினியை கைது செய்தனர். இந்த வழக்கு வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள பாலியல் குற்றங்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கில் இன்று நீதிபதி தீர்ப்பை வழங்கினார்.

 அதில் பெண்ணை பாலியல் வன் கொடுமை செய்த ஜெகனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் கட்ட தவறினால் 6 மாத சிறை தண்டனையும் பாலியல் வன் கொடுமைக்கு குற்றவாளிக்கு உதவியாக இருந்த அவரின் தோழி சாந்தினிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் கட்ட தவறினால் 6 மாத சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார் 
.இதனை அடுத்து பலத்த பாதுகாப்புடன் ஆண்கள் மத்திய சிறையில் ஜெகனும் பெண்கள் சிறையில் சாந்தினியையும் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Man sentenced to 20 years in prison for sexually assaulting teenage girl Vellore Special Court verdict


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->